விம்பம் ஒரு திறந்த வெளி அரங்கு
தேடலின் தாகம் கொண்ட சாமானியர்களின் கலைவெளி இது.
சமகால கலை, இலக்கியம், ஓவிய, நாடக, திரைப்படத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமான களம் இது.
2004 இல் ஆரம்பிக்கப்பட்டது.
கலை, இலக்கியக் கோட்பாடுகள், விமர்சனங்கள், நூல் வெளியீடுகள், நவீன ஓவியக் கண்காட்சிகள், புகைப்படங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என்று விம்பம் சகல கலை பண்பாட்டு செயற்பாடுகளிலும் கவனத்தைக் குவிக்க முனைகிறது.
புதிய சிந்தனைகள் காட்டாற்று வெள்ளமாய் பிரவகிக்கும் சூழலில் பழக்கப்பட்டுப் போன பழைய கருத்தோட்டங்களை புதிய ஒளியில் பரிசீலனை செய்யும் பக்குவம் சிந்தித்தால் தான் நவீன உலகை நாம் துணிவோடு தரிசிக்க முடியும்.
ஆர்வம் கொண்டோர் அக்கறை மிகுந்தோர் இணைந்து செயற்பட முன் வருமாறு விம்பம் வேண்டுகிறது.